வவுனியாவில் இடர் முகாமைத்துவ திட்ட கலந்தாய்வு செயலமர்வு!

மாவட்ட அனர்த்த இடர் முகாமைத்துவ திட்ட கலந்தாய்வு செயலமர்வு இன்று (12.09) காலை 10.00 மணியளவில் வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இடர் முகாமைத்துவ திட்ட கலந்தாய்வு செயலமர்வு!

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவினால் ஏற்பாடு செய்யப்படிருந்த குறித்த செயலமர்வில் மாவட்டத்தில் நிலவும் வறட்சி, வெள்ளம், கடும் காற்று மற்றும் மனித யானை முரண்பாடுகள் உள்ளிட்ட அனர்த்தங்கள் தொடர்பான அறிக்கைகளும் அனர்த்தம் ஏற்பட்ட மற்றும் அதற்கு சாத்தியமான இடங்கள் உள்ளிட்ட தரவுகளும் காட்சிப்படுத்தப்பட்டு அவை தொடர்பான மேலதிக தகவல்கள் கலந்துரையாடப்பட்டன.

குறித்த செயலமர்விலே வவுனியா மாவட்ட செயலாளர்P.A. சரத்சந்ர, மேலதிக மாவட்ட செயலாளர் T. திரேஸ்குமார், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவின் உதவிப்பணிப்பாளர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் பலரும் பங்குபற்றியிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version