புத்தளத்தில் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட காணிகளை மீட்க நடவடிக்கை!

புத்தளம் மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்பட்ட 1000 ஏக்கர் காணிகளை மீட்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் பல்வேறு நபர்களால் சட்ட விரோதமாக கைப்பற்றப்பட்ட நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகுள்ளான பகுதிகளில் அமைந்துள் ள1000 ஏக்கர் காணிகளை மீட்பதற்கான நடவடிக்கையை வன பாதுகாப்பு திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக நம் நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வன பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த காணிகள் 2009 மற்றும் 2008 காலபகுதிகளில் அரசியல் ஆதரவுடன் சிலரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இதுவரையான காலப்பகுதியியில் அதில் 350 ஏக்கர் நிலத்தை வன பாதுகாப்பு திணைக்களம் மீட்டுள்ளது. குறித்த இடங்கள் தற்போது உப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

சட்டரீதியான முறையில் இந்த காணிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் பிரதி வன பாதுகாப்பாளர் லலித் கமகேவின் தலைமையின் கீழ் நடைபெற்று வருகிறது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version