மஹவயிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று (27.09) காலை தடம் புரண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அப்பகுதியூடான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கரையோரப் பாதையில் ஒரு பாதையில் மாத்திரம் ரயில் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் தடம் புரண்டதன் காரணமாக ரயில் பாதையும் சேதமடைந்துள்ள நிலையில், அதனை சீர் அமைக்கும் பணிகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.