நாட்டின் மேல், தெற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இன்று (04.10) 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இதுவரையில்10 மாவட்டங்களைச் சேர்ந்த 25,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, மாத்தறை, காலி, நுவரெலியா, புத்தளம், குருநாகல் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் 6,250 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,
தொடரும் மழையினால் கம்பஹ மாவட்டத்தை சேர்ந்த அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த 24 மாதங்களில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 72 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.