”ரஞ்சித் மத்தும பண்டார தகாத வார்த்தைகளில் பேசினார்” – கொந்தளிக்கும் டயனா!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தன்னை தகாத திட்டியதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.

ரஞ்சித் மத்தும பண்டார பாராளுமன்றத்தில் பேசும்போது பெண்களை இழிவு படுத்தும் வார்த்தையை கூறி தம்மை அழைத்தாகவும், இது உண்மையில் வார்த்தைகளின் வடிவத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதாக அமையும் எனவும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

மக்கள்தொகையில் 52 சதவீதம் பெண்களை கொண்ட இந்த நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் அவமதிக்கும் செயலாக இது அமைவதாகவும், பாராளுமன்றத்திற்கு எம்.பி.க்களை தேர்வு செய்வது பெண்களே.அவர்களை இழிவுபடுத்த இந்த எம்.பி.க்களுக்கு உரிமை இல்லை எனவும், இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது புடவைகளில் ஒன்றை மத்தும பண்டாரவுக்குக் கடனாகக் கொடுக்க முடியும் எனவும், அவர் அதை அணிந்து ஒரு பெண்ணின் வேலையைச் செய்யலாம். எனவும் தான் அவருடைய கால்சட்டை ஒன்றை அணிந்து ஒரு ஆணின் வேலையைச் செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இனி வரும் நாட்களில் என்னை அல்லது எந்த ஒரு பெண் எம்.பி.யையும் அவர் மீண்டும் அவமானப்படுத்தினால், அவருக்கு நல்ல பாடம் புகட்ட தாம் தயாராக இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version