இம்முறை 20-20 புதிய உலக சம்பியன்

அவுஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியினை உலக கிண்ண 20-20 கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்றதன் மூலமாக இம்முறை புதிய உலக சம்பியன் அணி ஒன்று தெரிவு செய்யப்படவுள்ளது. அவுஸ்திரேலியா அணியின் அபாரமான போராட்டம் அவரக்ளுக்கு வெற்றியினை பெற்றுக் கொடுத்தது.
இரண்டாவது தடவையாக அவுஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. நியூஸிலாந்து அணி முதற் தடவையாக இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

உலகக்கிண்ண 20-20 தொடரில் இரண்டாவது அரை இறுதிப் போட்டியாக அவுஸ்திரேலியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய பாக்கிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றது. இதில் மொஹமட் ரிஸ்வான் 67(52) ஓட்டங்களையும், பக்கார் சமான் ஆட்டமிழக்காமல் 55(32) ஓட்டங்களையும், பாபர் அஸாம் 39(34) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களை பெற்றது.இதில் டேவிட் வார்னர் 49(30) ஓட்டங்களையும், மத்திய வேட் ஆட்டமிழக்காமல் 41(17) ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆட்டமிழக்காமல் 40(31), மிச்செல் மார்ஷ் 28(22) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஷதாப் கான் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

டேவிட் வோர்னரின் ஆட்டமிழப்பு, உண்மையில் ஆட்டமிழப்பில்லை என்பது தெரிந்தது. ஆனால் டேவிட் வோர்னர் மீள் பரிசீலனை செய்யவில்லை. இந்த ஆட்டமிழப்பு இந்த போட்டியில் தாக்கம் செலுத்தியது முக்கிய விடயமாகும்.

நியூசிலாந்து மற்றும் அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இம்முறை 20-20 புதிய உலக சம்பியன்

Social Share

Leave a Reply