இலங்கை அணிக்கு அபார வெற்றி.

இலங்கை அணிக்கு அபார வெற்றி.

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி 08 விக்கெட்களினால் அபார வெற்றி ஒன்றினை பெற்றுள்ளது.

பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியை 156 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்து அந்த இலக்கை 25.4 ஓவர்களில் 02 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

ஆரம்ப விக்கெட்கள் இரன்டு அடுத்தடுத்து சிறிய இடைவெளிகளில் வீழ்த்தப்பட்ட போதும் பத்தும் நிஸ்ஸங்க நல்ல ஆரம்பத்தை வழங்கி இலங்கை அணியின் வெற்றியை இலகுபடுத்தினார். சதீர சமரவிக்ரம, நிஸ்ஸங்க ஆகியோர் சத இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர். அத்தோடு அரைச்சதங்களை பூர்த்தி செய்தனர்.

நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இலங்கை அணியின் அபார பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறிப்போனார்கள். ஆரம்ப இணைப்பாட்டம் 45 ஓட்டங்களை வழங்கிய போதும் பின்னர் விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன. இந்தப் போட்டிக்காக அழைக்கப்பட்ட லஹிரு குமார, அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை தகர்த்தனர்.

ஆறாவது விக்கெட் இணைப்பாட்டமாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெயின் அலி இணைந்து தடுமாறிய அணியை மீண்டும் கட்டி எழுப்பினார்கள். இருப்பினும் மத்தியூஸ் அதனை முறியடித்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்தன.

பென் ஸ்டோக்ஸ் கூடுதலான ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார கூடிய விக்கெட்களை கைப்பற்றினார். அஞ்சலலோ மத்தியூஸ் மிக சிறப்பாக பந்துவீசி தனது மீள் வருகையை காண்பித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து செயற்பட்டால் நல்லதே.

இரு அணிகளும் 5 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இலங்கை அணி இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. உலகக்கிண்ண தொடரின் இறுதி வரை செல்லுமென எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததன் மூலம் அரை இறுதி வாய்ப்பை பெறுவதே சந்தேகம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து அணி ஒன்பதாம் இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸ்ஸங்க  778371
குசல் பெரேராபிடி- பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ்,டேவிட் வில்லி050810
குஷல் மென்டிஸ்பிடி- ஜோஸ் பட்லர்,டேவிட் வில்லி111720
சதீர சமரவிக்ரம  655471
      
     
      
      
      
      
      
உதிரிகள்  03   
ஓவர்  25.4விக்கெட்  10மொத்தம்160   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
க்றிஸ் வோக்ஸ்06003000
டேவிட் வில்லி05003002
ஆதில் ரஷீட்4.4003900
மார்க் வூட்04002300
லியாம் லிவிங்க்டன்03001700
மொயீன் அலி03002100
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ஜொனி பார்ஸ்டோவ்பிடி- தனஞ்சய டி சில்வாகஸூன் ரஜித303130
டாவிட் மலான்பிடி- குஷல் மென்டிஸ்அஞ்சலோ மத்தியூஸ்282560
ஜோ ரூட்Run Out 031000
பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ்பிடி- டுஷான் ஹேமந்தலஹிரு குமார437360
ஜோஸ் பட்லர்பிடி- குஷல் மென்டிஸ்லஹிரு குமார080610
லியாம் லிவிங்ஸ்டன்L.B.Wலஹிரு குமார010600
மொயீன் அலிபிடி- குசல் பெரேராஅஞ்சலோ மத்தியூஸ்151510
கிறிஸ் வோக்ஸ்பிடி- சதீர சமரவிக்ரமகஸூன் ரஜித000400
டேவிட் வில்லி  201220
ஆடில் ரஷிட்Run Out 020700
மார்க் வூட்பிடி- குஷல் மென்டிஸ்மஹீஸ் தீக்ஷண050610
உதிரிகள்  13   
ஓவர்  33.2விக்கெட்  10மொத்தம்156   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
டில்ஷான் மதுஷங்க05003700
கஸூன் ரஜித07360201
மஹீஸ் தீக்ஷண8.2012100
அஞ்சலோ மத்தியூஸ்05011402
லஹிரு குமார07003503
தனஞ்சய டி சில்வா01001000
     
அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
இந்தியா05050000101.353
தென்னாபிரிக்கா05040100082.370
நியூசிலாந்து05040100081.481
அவுஸ்திரேலியா05030200061.142
இலங்கை0502030004-0.205
பாகிஸ்தான்0502030004-0.456
ஆப்கானிஸ்தான்0502030004-1.250
பங்களாதேஷ்0501040002-1.253
இங்கிலாந்து0501040002-1.634
நெதர்லாந்து0501040002-1.902

அணி விபரம்

இங்கிலாந்து அணி : ஜொனி பாஸ்டோ, டாவிட் மலான், ஜோ ரூட், பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்க்டன், மொயீன் அலி , டேவிட் வில்லி, ஆதில் ரஷீட், மார்க் வூட், க்றிஸ் வோக்ஸ்

இலங்கை அணி: குஷல் மென்டிஸ்(தலைவர்), குசல் பெரேரா, பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷண, டில்ஷான் மதுஷங்க, லஹிரு குமார, கஸூன் ரஜித

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version