பாடசாலை கல்வி காலத்தை குறைக்க புதிய யோசனை முன்மொழிவு!

அரச பாடசாலைகளின் கல்வித் தரங்களின் எண்ணிக்கையை 12 ஆகக் குறைக்கவும், சாதாரண தரப் பரீட்சையை 10ம் தரத்திற்கு மாற்றவும், உயர்தரப் பரீட்சையை 12 ஆம் தரமாக்கும் யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு பிள்ளையின் பாடசாலைக்கல்வி 17 வயதில் முடிவடைய வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் புலமைப்பரிசில் பரீட்சையை எளிமையாக்கவும் போட்டியைக் குறைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது, அத்துடன் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை பாடசாலை அடிப்படையிலான மதிப்பீடுகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்திற்கு கொண்டு வர முன்மொழியப்பட்டுள்ளது.

க.பொ.த பொதுத் தேர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடங்களின் எண்ணிக்கை 9ல் இருந்து 7ஆக குறைக்கப்பட்டு, அந்த 7 பாடங்களில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை திறன்கள் மற்றும் சமயம் ஆகிய மூன்று புதிய பாடங்கள் கட்டாயமாக்கப்படவும் முன்மொழியப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version