அண்மைக்காலமாக மாநகரசபைகளினால் யாசகர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் கொழும்பில் யாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக சேவைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின்படி மேல் மாகாணத்தில் மட்டும் 1,618 யாசகர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த கொரோனா தொற்றின் பின்னர், சில துப்புரவு நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், அந்த நிறுவனங்களின் ஊழியர்கள் தற்போது யாசகம் பெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளதுடன், கொழும்பில் உள்ள வீதி சமிஞ்சைகளுக்கு அருகில் யாசிப்பவர்களில் பெரும்பாலானோர் போதைக்கு அடிமையானவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்போது யாசகர்களுக்கு புனர்வாழ்வளிக்க ஸ்தாபிக்கப்பட்டுள்ள ரிதிகம புனர்வாழ்வு நிலையத்தில் 500க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது.