வடக்கிற்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்..!

வடக்கு ரயில் மார்க்கத்தினை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹவ முதல் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் மார்க்கம் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி முதல் 06 மாத காலத்திற்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கசன்துறை வரை மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version