ஜப்பான் நிதியமைச்சர், நாட்டிற்கு வருகை..!

ஜப்பான் நிதியமைச்சர், சுனிச்சி சுசுகி எதிர்வரும் ஜனவரி மாதம் நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை மற்றும் கம்போடியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அவரது இலங்கை விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த நவம்பர் மாதம், ஜப்பான் மற்றும் ஏனைய கடன் வழங்குநர் குழு இலங்கையின் கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைத்தல் மற்றும் வட்டி விகிதங்களைக் குறைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அடிப்படை உடன்பாட்டை எட்டியிருந்தன.

இந்நிலையில் கடன் மறுசீரமைப்பு செயல்முறை நிலையான முன்னேற்றத்தை அடைவது முக்கியம் என ஜப்பானிய நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய இரண்டு ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஜப்பான் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி சுற்றுப் பயணங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version