மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை!

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, குஞ்சுக்குளம் பிரதான சோதனைச் சாவடியில் நேற்று (09.01) மாலை போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால ஹேரத் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மன்னாரில் இருந்து சென்ற வாகனங்கள், மற்றும் மன்னார் நோக்கி பயணித்த சகல வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் வாகனங்களில் பயணித்த மக்களுக்கு போதைப் பொருள் பரிசோதனை குறித்து அறிவித்தல்களும் வழங்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version