மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த பணிப்பு

அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களை விரைவாக பாதுகாப்பான இடங்களில் குடியேற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நிலவும் சீரற்ற வாநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நேற்று (16/11) பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த பணிப்புரையை விடுத்தார்.

அனர்த்த நிலைமை தொடர்பில் பிரதமர் கேட்டறிந்த போது, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் 21 மாவட்டங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. அதுபோலவே இழப்பீடு வழங்கும் முதற்கட்ட நடவடிக்கைகளும் விரைவாக நிறைவு செய்யப்பட்டுள்ளமை குறித்து பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்போது பாதிக்கப்பட்ட 12,000 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு பிரதமர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

அத்துடன் ஆபத்தான சூழ்நிலைகளை கண்டறிந்து மக்களை பாதுக்காக்கும் சகல நடவடிக்கைகளையும் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மேலும் அறிவுறுத்தினார்.

மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த பணிப்பு
Social Share
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version