தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக உள்ளுராட்சிமன்ற வரவு – செலவு திட்டத்தை தோற்கடித்து அபிவிருத்தி பணிகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாமென, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் கேட்டுக் கொண்டுள்ளார்.
உள்ளுராட்சிமன்ற அதிகாரிகளுடன் திருகோணமலையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவைத் தலைவர், மேயர் அல்லது ஆளுநருடன் ஏதேனும் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் அதனை வரவு – செலவு திட்டத்தில் புகுத்துவதை தவிர்த்துகொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், “வரவு – செலவு திட்டத்தை தோற்கடித்து, அவைத் தலைவர்களுடன் ஏற்பட்ட தனிப்பட்ட பூசல்கள், இடையூறுகளை தீர்த்துக்கொள்ள முற்படும் செயற்பாடுகளை செய்யாதீர்கள். அவை கிராமத்தின் அபிவிருத்தி பணிகளுக்குத் தடையாக அமைவதுடன், சபைகளை நிலையற்றதாக்கி, அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை பின்னோக்கி கொண்டு செல்லும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
