இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்று (17.01)
முன்றாவதும் இறுதியுமான T20 போட்டி பெங்களுரூவில் நடைபெற்றது. இந்த
போட்டியில் இந்தியா அணி 2 ஆவது சுப்பர் ஓவரில் வெற்றி பெற்று தொடரை 3-0
என கைப்பற்றியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 20
ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றது. இதில் ரோஹித்
ஷர்மா ஆட்டமிழக்காமல் 121(61) ஓட்டஙகளையும், ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல்
69(39) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பரீட் அஹமட் 3 விக்கெட்களை
கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றது. இதில் குல்படின் நைப் ஆட்டமிழக்காமல் 55(23) ஓட்டங்களையும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 50(32) ஓட்டங்களையும், இப்ரஹிம் சட்ரன் 50(41) ஓட்டங்களையும், மொஹமட் நபி 34(16) ஓட்டங்களையும் பெற்றனர்.
முதலாவது சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 1 ஓவரில் 1 விக்கெட்டினை இழந்து 16 ஓட்டங்களை பெற்றது.
முதலாவது சுப்பர் ஓவரில் பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி இழந்து 16 ஓட்டங்களை பெற்றது.
இரண்டாவது சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 1 ஓவரில் 1 விக்கெட்டினை இழந்து 11 ஓட்டங்களை பெற்றது.
இரண்டாவது சுப்பர் ஓவரில் பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 0.3 ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 01 ஓட்டத்தை மாத்திரம் பெற்றது.