இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக IOM நிறுவனத்தின் அனுசரணையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது கூட்டு இழப்பீடு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் யாழ் மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இக் கலந்துரையாடலில் இறங்கு துறைமுக மீள்கட்டுமாணம், வீதிப் புனரமைப்பு, வீட்டுத் திட்டங்கள், உள்ளக விளையாட்டு மைதானம் அமைத்தல், போதைப் பொருள் தடுப்பு புனர்வாழ்வு முகாம் அமைத்தல், உள்ளூர் கைத்தொழிலை ஊக்குவித்தல், படகு சேவையின் விஸ்தரிப்பு மற்றும் விவசாய நவீனமயமாக்கல் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்திப் பணிப்பாளர், இணைப்பாளர் (IOM), மாவட்ட இணைப்பாளர் (IOM) மற்றும் இழப்பீடுகளுக்கான மாவட்ட உத்தியோகத்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தார்கள்.