மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட வேறு நாடுகளைச் சேர்ந்த 560 பேர் மலேசிய குடிவரவு துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசிய தலைநகர் கோலாலப்பூருக்கு அருகில் பெரெனாங் பண்டார் தாசிக் கேசுமாவில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்புகளில் அவர்கள் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், இந்தோனேசியா, கம்போடியா, சியாராலோன் , கெமரூன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை கூட்டு நடவடிக்கையின் கீழ் கைது செய்துள்ளதாக மலேசிய குடிவரவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது சிலர் தப்பியோட முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.