இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைக்கு 14 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளமையினால் சதொச விற்பனை நிலையங்களில் முட்டைக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் என்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வர்த்தக நிலையங்களில் 51 ரூபா முதல் 52 ரூபா வரை முட்டையொன்று விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
புதுவருடத்தின் போதும் முட்டை சந்தைக்கு விடுவிக்கப்படவில்லை என வர்த்தகர்களை மேற்கோள்காட்டி மக்கள் குற்றம் சுமத்துக்கின்றனர்.