சிரியாவின் தலைநகர் மீது மேற்கொள்ளப்பட்ட வான்வழித்தாக்குதலில் ஈரானிய பாதுகாப்புப் படையை சேர்ந்த உயர் அதிகாரிகள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணம் என இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும், இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் எதுவித கருத்துக்களையும் முன்வைக்கவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியாவில் ஈரானுடன் தொடர்புடைய இலக்குகள் மீது இஸ்ரேல் பல ஆண்டுகளாக தாக்குதல் மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் அதிகம் பதிவாவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.