அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக 90 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வாரத்தின் நடுப்பகுதி வரை பனிமூட்டம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டென்னசி மற்றும் ஓரிகான் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவு செய்துள்ளன.
அதனைத் தொடர்ந்து இல்லினாய்ஸ், பென்சில்வேனியா, மிசிசிப்பி, வாஷிங்டன், கென்டக்கி, விஸ்கான்சின், நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் பல மாநிலங்கள் பனிப்புயலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.