நாட்டின் 5 மாவட்டங்களில் வருடம் முழுவதும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போதும் யாழ்ப்பாணத்தில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.