ICC விருதுகள்

சர்வதேசக் கிரிக்கெட் பேரவை 2023 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் விருதுகளை அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக ஒவ்வொரு விருதுகள் அறிவிக்கப்பட்டு இன்று(25.01) முழுமையாக சகல விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் காபீல்ட் சோர்பஸ் விருதை அவுஸ்திரேலியா அணியின் தலைவர் பட் கம்மின்ஸ் வென்றுள்ளார். 11 டெஸ்ட் போட்டிகளில் 42 விக்கெட்களையும், 13 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 17 விக்கெட்களையும் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் சிறந்த பந்துவீச்சின் மூலம் 2 விக்கெட்களையும், அரை இறுதிப் போட்டியில் துடுப்பாட்டத்தின் மூலம் அபாரமான 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.

இங்கிலாந்து அணியின் சகலதுறை வீராங்கனை நட் சீவியர் ப்ரண்ட் சிறந்த 2023 ஆம் ஆண்டின் வீராங்கனைக்கான ரச்சேல் ஹெய்ஹோ பின்ட விருதை வென்றுள்ளார். 2 டெஸ்ட் போட்டிகளில் 137 ஓட்டங்கள், 6 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 393 ஓட்டங்களையும், பத்து 20-20 போட்டிகளில் 364 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். அத்தோடு மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.

சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அவுஸ்திரேலியா அணியின் உஸ்மான் காவாஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1210 ஓட்டங்களை 2023 ஆம் ஆண்டு பெற்றுள்ளார். இவர் மாத்திரமே 1000 ஓட்டங்களை தாண்டிய ஒரே ஒரே டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் ஆவார்.

விராத் கோலி சிறந்த ஒரு நாள் சர்வதேசப் போட்டி வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1377 ஓட்டங்களை அவர் பெற்றுள்ளார். இரண்டாவது கூடுதலான ஓட்டங்கள் இதுவாகும். உலகக்கிண்ண தொடரின் தொடர் நாயகன் விருதை கூடுதலான ஓட்டங்ளை பெற்று கோலி பெற்றுக் கொண்டார்.

இலங்கை அணியின் தலைவி சாமரி அத்தப்பத்து சிறந்த ஒரு நாள் சர்வதேசப் போட்டி வீராங்கனை விருதை வென்றுள்ளார். இலங்கை மகளிர் அணி சார்பாக பெறப்பட்ட விருது இதுவாகும். இவர் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் உலக ஒரு நாள் சர்வதேசப் போட்டி மற்றும், 20-20 அணிகளுக்கான தலைவியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை மேலதிக பெருமையாகும். 8 போட்டிகளில் 415 ஓட்டங்களை சாமரி பெற்றுள்ளார்.

சிறந்த 20-20 வீரராக இந்தியா அணியின் சூர்யகுமார் யாதவ் தெரிவு செய்யப்பட்டுளளார். கடந்த வருடம் 2 சதங்கள் அடங்கலாக 733 ஓட்டங்களை 18 போட்டிக்கால்கள் பெற்றுக்கொண்டார்.

20-20 போட்டிகளின் சிறந்த வீராங்கனையாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவி ஹெய்லே மத்தியூ வென்றுள்ளார். 14 போட்டிகளில் 700 ஓட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

நியூசிலாந்து அணியின் டெரில் மிற்செல் சிறந்த அறிமுக வீரருக்கான விருதை வென்றுள்ளார். பந்துவீச்சாளராக களமிறங்கி, உலகக்கிண்ண தொடரில் துடுப்பாட்டத்தின் மூலம் ஓட்டங்களையும் அள்ளிக்குவித்து 2023 ஆண்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த புது முகம் இவரே. 25 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 820 ஓட்டங்களையும், 18 விக்கெட்களையும் கைப்பற்றிக்கொண்டார். 12 T20 சர்வதேசப் போட்டிகளில் 91 ஓட்டங்களையும், 5 விக்கெட்களையும் பெற்றுள்ளார்.

சிறந்த நடுவர் விருதை இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்கிவேர்த் வென்றுளார்.

சிறந்த கனவான்தன்மைக்கான அணியாக சிம்பாவே அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ICC ஆண்கள் டெஸ்ட் அணி

1.உஸ்மன் கவாஜா (அவுஸ்திரேலியா)
2.திமுத் கருணாரத்ன (இலங்கை)
3.கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)
4.ஜோ ரூட் (இங்கிலாந்து)
5.டிரவிஸ் ஹெட் (அவுஸ்திரேலியா)
6.ரவீந்திர ஜடேஜா (இந்தியா)
7.அலெக்ஸ் கேரி (விக்கெட் காப்பாளர், அவுஸ்திரேலியா)
8.பட் கம்மின்ஸ் (தலைவர், அவுஸ்திரேலியா)
9.ரவிச்சந்திரன் அஷ்வின் (இந்தியா)
10.மிட்செல் ஸ்டார்க் (அவுஸ்திரலியா)
11.ஸ்டுவர்ட் ப்ரோட் (இங்கிலாந்து)

ICC பெண்கள் ஒரு நாள் சர்வதேச அணி

1.போப் லிச்பீல்ட் (அவுஸ்திரேலியா)
2.சாமரி அத்தப்பது (தலைவி, இலங்கை)
3.எல்லிஸ் பேர்ரி (அவுஸ்திரேலியா)
4.அமேலியா கேர் (நியூசிலாந்து)
5.பெத் மூனி (விக்கெட் கப்பாளர், அவுஸ்திரேலியா)
6.நட் ஸ்கிவெர் ப்ரண்ட் (இங்கிலாந்து)
7.அஷ் கார்ட்னர் (அவுஸ்திரேலியா)
8.அன்னபெல் சதர்லாண்ட் (அவுஸ்திரேலியா)
9.நடினி டி க்ளெர்க் (தென்னாபிரிக்கா)
10.லியா தஹுஹூ (நியூசிலாந்து)
11.நஹிதா அக்டெர் (பங்களாதேஷ்)

ICC ஆண்கள் ஒரு நாள் சர்வதேச அணி

1.ரோஹித் ஷர்மா (தலைவர், இந்தியா)
2.ஷுப்மன் கில் (இந்தியா)
3.ட்ரவிஸ் ஹெட் (அவுஸ்திரேலியா)
4.விராத் கோலி (இந்தியா)
5.டேரில் மிட்செல் (நியூசிலாந்து)
6.ஹென்றிச் க்ளாஸென் (விக்கெட் காப்பாளர், தென்னாபிரிக்கா)
7.மார்கோ ஜென்சன் (தென்னாபிரிக்கா)
8.அடம் சம்பா (அவுஸ்திரேலியா)
9.மொஹமட் சிராஜ் (இந்தியா)
10.குல்தீப் யாதவ் (இந்தியா)
11.மொஹமட் ஷமி (இந்தியா)

ICC பெண்கள் T20 அணி

1.சாமரி அத்தப்பத்து (தலைவி, இலங்கை)
2.பெத் மூனி (விக்கெட் காப்பாளர், அவுஸ்திரேலியா)
3.லௌரா வோல்வர்ட் (தென்னாபிரிக்கா)
4.ஹய்லி மத்தியூஸ் (மேற்கிந்திய தீவுகள்)
5.நட் ஸ்கிவெர் ப்ரண்ட் (இங்கிலாந்து)
6.அமெலியா கேர் (நியூசிலாந்து)
7.எல்லிஸ் பேர்ரி (அவுஸ்திரேலியா)
8.அஷ் கார்ட்னர் (அவுஸ்திரேலியா)
9.தீப்தி ஷர்மா (இந்தியா)
10.சோபி எக்கி ல்ஸ்டோன் (இங்கிலாந்து)
11.மேகன் ஸ்கட் (அவுஸ்திரேலியா)

ICC ஆண்கள் T20 அணி

1.யஷஷ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா)
2.பில் சால்ட் (இங்கிலாந்து)
3.நிக்கொலஸ் பூரான் (விக்கெட் காப்பாளர், மேற்கிந்திய தீவுகள்)
4.சூர்யகுமார் யாதவ் (தலைவர், இந்தியா)
5.மார்க் சப்மன் (நியூசிலாந்து)
6.சிகந்தர் ரசா (சிம்பாவே)
7.அல்பேஷ் ராம்ஜனி (உகாண்டா)
8.மார்க் அடைர் (அயர்லாந்து)
9.ரவி பிஷ்ணோய் (இந்தியா)
10.ரிச்சர்ட் ங்கராவா (சிம்பாவே)
11.அர்ஷ்தீப் சிங் (இந்தியா)

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version