சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக மஹேந்திரா சிங் டோனி நீக்கப்பட்டு, ருத்துராஜ் ஹெய்க்வுட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக இருந்த ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டு, ஹார்டிக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக பட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷாப் பாண்ட் மீள் வருகையினை மேற்கொள்ளவுள்ளார். டெல்லி கப்பிட்டல்ஸ் அணிக்கு அவரே தலைமை பொறுப்பை தொடர்கிறார். லக்னோ சுப்பர் ஜியன்ட்ஸ் அணியின் தலைவராக லோகேஷ் ராகுலும், கிங்ஸ் 11 பஞ்சாப் அணியின் தலைவராக ஷிகார் தவானும் தொடர்கின்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணி சுப்மன் கில்லை தலைவராக நியமித்துள்ளது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவராக சஞ்சு சம்சனும், கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக ஷ்ரேயாஸ் ஐயரும் இம்முறையும் கடமையாற்றவுளள்னர். பெங்களூரு ரோயல் சலஞ்சர்ஸ் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள பெங்களுர் அணியின் தலைவராக இம்முறையும் பப் டு பிளேஸிஸ் தலைமை தாங்குகிறார்.