மூடப்படும் மெக்டொனால்ட் உணவகங்கள்..! 

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மெக்டொனால்ட் வர்த்தக நாமத்தின் கீழ் இயங்கும் 12 உணவகங்களை நடாத்துவதற்கு ஏப்ரல் 4 ஆம் திகதி வரை தடை விதித்து கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

மெக்டொனால்ட் உணவகங்களின் அமெரிக்க தாய் நிறுவனம் இலங்கை நீதிமன்றில் தாக்கல் செய்த முறைப்பாட்டிற்கமைய குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கை தனியார் நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்டு வந்த மெக்டொனால்ட் உணவகங்கள், சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்படவில்லை என அமெரிக்க தாய் நிறுவனம் முறைப்பாடு செய்திருந்தது.

குறைபாடுகளை நிவர்த்தி செய்து தரத்தை பேணுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை இலங்கை நிறுவனம் தொடர்ச்சியாக புறக்கணித்திருந்தமையினால் கடந்த 21ம் திகதி இலங்கை நிறுவனத்துடனான ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதாக அமெரிக்க தாய் நிறுவனத்தின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,  12 மெக்டொனால்ட் உணவகங்களை நடாத்துவதற்கு ஏப்ரல் 4 ஆம் திகதி வரை தடை விதித்து கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

இந்நிலையில், இலங்கையில் உள்ள மெக்டொனால்ட் உணவகங்கள் தற்போது மூடப்பட்டுள்ள நிலையில், குறித்த உணவகத்தின் தொலைபேசி எண்கள் மற்றும் வலைத்தளங்களும் பயன்பாட்டில் இல்லை. ஆகவே குறித்த உணவகங்கள் இலங்கையில் மீண்டும் திறக்கப்படுமா என்கின்ற சந்தேகம் நிலவுகின்றது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version