மைத்திரியிடம் வாக்குமூலம் பெறவுள்ள  குற்றப்புலனாய்வு பிரிவு..! 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நாளை(25) வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளனர். 

மைத்திரிபால சிறிசேன,  உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் குறித்து தமக்கு தெரியும் என அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்று(23) உத்தரவிட்டிருந்தார். 

இதற்கமைய, மைத்திரிபாலவின் கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் குறித்து தமக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டியில் கடந்த 22ம் திகதி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version