பால் தேநீர் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைப்பட்டதையடுத்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலை 150 ரூபாவினாலும், 400 கிராம் பால்மா பொதியின் விலை 60 ரூபாவினாலும் குறைப்பட்டது.