ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் ஒரே நாளிலா?

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை ஒரே நாளில் நடாத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தமக்கு தகவல் அறிய கிடைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடாத்துவதற்கு சட்டத்தில் எவ்வித தடையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply