கடந்த பண்டிகை காலங்களை விட இந்த ஆண்டு பட்டாசுகளுக்கான கேள்வி மக்களிடையே அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாடு பூராகவும் அனைத்து விதமான பட்டாசுக்களும் விநியோகிக்கப்படுவதாக தினேஷ் பெர்னாண்டோ ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போது வெளிப்படுத்தியுள்ளார்.
பட்டாசுக்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களின் விலை 30 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியள்ளார்.
அதன்படி, பட்டாசுக்கள் குறைந்த விலை விற்பனை செய்யப்படுவதாகவும் அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக பட்டாசு உற்பத்தி உரிய முறையில் நடைபெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.