இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைக்கப்பட்டுள்ளதாக சன்ரைஸ் ஹைதராபாத் அணி அறிவித்துள்ளது. இதனை வியாஸ்காந்த் தனது சமூகவலைத்தளம் ஊடாக உறுதி செய்துள்ளார். சன்ரைஸ் ஹைதராபாத் அணி சார்பாக வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக விலகியுள்ள நிலையில் அவரின் இடத்துக்கு வியாஸ்காந்த் இணைக்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத் அணியோடு வியாஸ்காந்த் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே அவர் அணியில் 8இணைக்கப்பட்டுள்ளார்.
சன்ரைஸ் அணியோடு இணைந்து முரளிதரனின் கீழ் வியாஸ்காந்த் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதும், விளையாடுகின்றாரோ இல்லையோ அணியோடு பயணிப்பதும் அவருக்கு முன்னேற்றத்தை வழங்கும். அவருக்கு மேலும் அனுபவம் கிடைக்கும். படிப்பபடியாக வியாஸ்காந்த் அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்து வருகின்றமை சிறப்பம்சமே.