முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்
முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கணுக்கேணி பகுதியில், பூண்டன்வயல் சந்தி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.