தென்னிலங்கையில் இருக்கும் சில இனவாத தலைவர்களுக்கு விலை போயுள்ளவர்களது பணப்பெட்டிகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தரப்பினரே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியாக ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை முன்நிறுத்தி தமிழ் மக்களின் முழுமையான வாக்குகளையும் அவருக்கு வழங்கினாலும் குறித்த வேட்பாளரால் ஜனாதிபதியாக முடியாது எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் யாழ் ஊடக அமையத்தில் இன்று(19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
சில சதியாளர்களின் திட்டமாகவே ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் பொது வேட்பாளர் முன்மொழிவு இருக்கின்றதாகவும் தமிழ் மக்களின் நலன்சார்ந்தோ அல்லது அரசியல் தீர்வுகளுக்கான வழியை காட்டும் ஒன்றாகவோ அது அமையப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் தமிழ் மக்கள் ஏமாறாது இருப்பது அவசியம் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.