எல்.பி.எல் – தம்புள்ளை அணியின் உரிமம் புதிய நிறுவனத்திற்கு  

இவ்வருடத்திற்கான லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான தம்புள்ளை அணிக்கான உரிமம் புதிய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

பங்களாதேஷ் தொழில்முனைவோர்களான தமிம் ரஹ்மான் மற்றும் கோலம் ரகிப் தலைமையிலான இம்பீரியல் ஸ்போர்ட்ஸ் குழுமத்திற்கு தம்புள்ளை அணியின் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்திலும் வியாபாரத்தில் அனுபவமிக்க இவர்கள், லங்கா பிரீமியர் லீக் தொடருக்கு புதிய தோற்றத்தை கொண்டு வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இம்முறை லங்கா பிரீமியர் லீக் தொடரில் தம்புள்ளை தண்டர்ஸ் எனும் பெயரில் குறித்த அணி களமிறங்கவுள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் இம்பீரியல் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் இணை நிறுவனர் தமிம் ரஹ்மான் கூறுகையில், “உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக திறமை மற்றும் விளையாட்டு திறனை கொண்ட ஒரு அணியை உருவாக்குவதே முக்கிய நோக்கம்” என தெரிவித்துள்ளார். 

உள்நாட்டில் உள்ள திறமைகளை வளர்ப்பதற்கும், இலங்கை சமூகத்தில் கிரிக்கெட்டின் ஊடாக நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் எதிர்ப்பார்ப்பதாக இணை நிறுவனர் கோலம் ரகிப் தெரிவித்துள்ளார். 

தம்புள்ளை தண்டர்ஸில் இணையவுள்ள வெளிநாட்டு மற்றும் இலங்கை வீரர்கள் தொடர்பில் விரைவில் அறிவிப்புக்கள் வெளியாகவுள்ளன.  

இந்த வருடத்திற்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 21ம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version