சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளன. 

இதன்படி, எதிர்வரும் 09ம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் வழங்கிய வாக்குறுதி உரிய முறையில் நிறைவேற்றப்படாததால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்ததாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

நோயாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற்கொண்டு, நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு பதிலாக, மாகாண ரீதியாக அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களை கடமையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ள மாகாணங்களின் விபரங்கள், 

09ம் திகதி – வட மத்திய மாகாணம்

13ம் திகதி – மத்திய மாகாணம்

14ம் திகதி – சப்ரகமுவ மாகாணம்

15ம் திகதி – வடமேற்கு மாகாணம்

16ம் திகதி – தென் மாகாணம்

20ம் திகதி – ஊவா மாகாணம்

21ம் திகதி – மேல் மாகாணம் 

Social Share

Leave a Reply