இலவச அரிசியை உட்கொண்ட 7 கோழிகள் உயிரிழப்பு 

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச அரிசியை உட்கொண்ட 7 கோழிகள் உயிரிழந்துள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
ரிதிகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பானகமுவ பகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தவர் ஒருவர் தனது கோழிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச அரியை உட்கொள்ள வழங்கியுள்ளார். குறித்த அரிசிலைய உட்கொண்ட 7 கோழிகளும் உயிரிழந்துள்ளன.

இதனையடுத்து, உயிரிழந்த கோழிகளின் உரிமையாளர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களிடம் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.

இலவச அரிசியை உட்கொண்டதால் கோழிகள் உயிரிழந்துள்ளனவா என்பது தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக பரிசோதனை அறிக்கையை பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை வழங்குமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் றம்படகல்ல நீதிமன்றத்தில் கோரியிருந்தனர்.

இதற்கமைய, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச அரிசி தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு றம்படகல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version