தாதியர்களுக்கான ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துமாறு கோரிக்கை   

தாதியர்களுக்கான புதிய ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். 

2019/2020 காலப்பகுதியில் வெளியேறிய சுமார் 3000 பேர் தாதியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3000 பேர் நியமிக்கப்படவுள்ளனர். இந்த ஆட்சேர்ப்புகளை துரிதப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று(14.05) கோரிக்கை விடுத்தாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா, வங்குரோத்து நிலை போன்றவற்றால் இந்த ஆட்சேர்ப்பு தாமதமானது. இதை மேலும் தாமதப்படுத்தாமல் இந்த ஆட்சேர்ப்புகளை துரிதப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version