LTTE மீதான தடை மேலும் 05 ஆண்டுகளுக்கு நீடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய மத்திய அரசு மேலும் 05 ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது.

இலங்கையில், தனி நாடு கேட்டு, ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர், 1991இல், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதன் பின்னர் இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டில் இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டபோதும், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை, இந்தியாவில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

, வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த ஆதரவாளர்கள், இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான வெறுப்புணர்வை அதிகரிக்க முயற்சி செய்து வருகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அந்த அமைப்பு மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் மேலும் 05 ஆண்டுகளுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version