உடனடியாக மக்கள் ஆணைக்கு செல்ல வேண்டும் – சஜித் 

மத்திய வங்கி தன் விருப்பத்தின் பேரில் ஊதியத்தை அதிகரிக்கும் போது, ​​அரசாங்கம் அதை தன் விருப்பப்படி அங்கீகரிக்கிறது. இது நியாயமற்ற செயல். இதனால் வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வேலைநிறுத்தங்களால் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்பதால் இப்பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய ஒரு குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். சரியான குழுவைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 186 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் அனுராதபுரம்,
ஹொரோவ்பதான, கஹடகஸ்திகிலிய, முக்கிரியாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(15.05) இடம்பெற்றது. இந்நிகழ்வில்

கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டில் உள்ள சிலர் வாக்குறுதிகளை நம்பாவிட்டாலும், வாக்குறுதி விடயத்தில் தன் மீது அவநம்பிக்கை கொள்ள எந்த காரணமும் இல்லை என சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், வேறு எந்தவொரு எதிர்க்கட்சி குறித்தும் மக்களுக்கு நம்பிக்கையில்லாது போனாலும், தானும் தனது குழுவினரும் இதில் அடங்க மாட்டார்கள் என அவர் தெரிவித்தார். புதியதொரு பயணம், புதியதொரு திட்டம், புதியதொரு செயல்முறை ஊடாக சொல்வதை செய்வோம். செய்வதைச் சொல்வோம். இது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் உயர்கல்வி வீழ்ச்சியடைந்து வரும் தருணத்தில் இலவசக் கல்விக்கு மரண அடி விழுந்து வருகிறது. இலவசக் கல்வித்துறையில் பிரச்சினைகள் இருந்தாலும் தனியார் கல்வித்துறையில் பிரச்சினைகள் நிலவவில்லை. தற்போது கல்வித்துறையில் வேலைநிறுத்த அலை வீசுகிறது. கல்வித்துறையில் எங்கும் வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அரசாங்கம் அவர்களுக்கு உரிய சலுகைகளை வழங்க முடியாமல் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version