இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரையிலான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 13ம் திகதி கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் சில சட்டரீதியான அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால் எதிர்வரும் 17ம் திகதி வரை ஒத்திவைப்பதாக கப்பல் சேவையை முன்னெடுக்கும் முகாமைத்துவ நிறுவனம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில், எதிர்வரும் 19ம் திகதி வரை இந்திய – இலங்கை இடையிலான மீண்டும்  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அந்தமானில் இருந்து நாகப்பட்டினத்திற்கு வரவேண்டிய கப்பல் தாமதமானதால், இவ்வாறு கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த அறிவிப்பால் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைத்தரவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த கப்பல் சேவைக்காக முன்பதிவு செய்த பயணிகள், பயண திகதியை மாற்றிக் கொள்வதற்கு அல்லது கட்டணத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்கு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version