கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக கடந்த 14ம் திகதி பரீட்சை நிலையத்திற்குச் சென்று வீடு திரும்பாத நாவலப்பிடியவை சேர்ந்த இரு பாடசாலை மாணவிகள், கொழும்பு கடுவல பகுதியில் உள்ள உறவினர்களிள் வீட்டிலிருந்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரு மாணவிகளும் வேலைக்கு செல்லும் நோக்கில் கொழும்பிற்கு வருகை தந்துள்ள நிலையில், நேற்றைய தினம்(15.05) இரவு கடுவல பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.
மாணவிகள் இருவரும் கடந்த 14ம் திகதி காலை பரீட்சைக்கு தோற்றுவதற்காக அம்பகமுவ தேசிய பாடசாலை பரீட்சை நிலையத்திற்கு சென்று, மீண்டும் வீடு திரும்பாத நிலையில் மாணவிகளின் உறவினர்களினால் கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாவலப்பிட்டியில் உள்ள அக்ர ஓயா மற்றும் நாகஸ்தென்ன பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு மாணவிகளே இவ்வாறு காணாமல் போயிருந்ததுடன், தற்பொழுது கடுவல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.