சீரற்ற வானிலை – 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிகளை அண்மித்து வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version