இலங்கையில் Starlink இணைய சேவைக்கு அனுமதி 

இலங்கையில் Starlink இணைய சேவைக்கு அனுமதி இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு Starlink நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) பூர்வாங்க அனுமதி வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

உரிய முறையில் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்டறியப்பட்டதன் பின்னரே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை, பொது கலந்தாய்வு தொடர்பான விபரங்கள் நாளை(07.06) வெளியிடப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version