இலங்கையில் மற்றுமொரு சுனாமியா?

வவுனியா உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று முன் தினம் (18.06) திடீர் நில அதிர்வு பதிவானதைத் தொடர்ந்து அன்றைய தினம் முதல் வானில் இரண்டு மர்மப்பொருட்கள் காட்சியளிப்பதாக முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

நீல நிறத்தில் இருக்கும் இந்த இரண்டு மர்மப் பொருட்களும் வானத்தில் மெதுவாக மிதந்து வருவதாக கூறிய மீனவர்கள் நில அதிர்வின் பின்னரே இந்த மர்மபொருட்கள் வானில் தோன்றியுள்ளதாக கூறியுள்ளனர்.

நீல நிறத்தில் பிரகாசமாக காட்சியளிக்கும் அந்த மர்மப் பொருட்கள் கடலிலிருந்து பார்க்கும் போது தெளிவாக காட்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் சுனாமி ஏற்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் இவ்வாறான மர்ம பொருட்கள் வானில் தோன்றியதாகவும் அவை சுனாமியின் பின்னர் காணாமற் போனதாகவும் முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் பிரிவுக்கும் இந்த தகவல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் விபரங்கள் கொழும்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version