அவுஸ்திரேலியாவின் அரை இறுதி கேள்விக்குறியானது!

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான 20-20 உலகக்கிண்ண தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 21 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அவுஸ்திரேலியா அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில், தோல்வி அவர்களுக்கான அரை இறுதி வாய்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

அடுத்த போட்டியில் இந்தியா அணியை வென்றால் அவுஸ்திரேலியா அணிக்கு அரை இறுதி வாய்ப்பு கிடைக்கும். இருந்தாலும் பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தான் அணியை வென்றாலும் அவுஸ்திரேலியா அணிக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியை வென்றால், அவுஸ்திரேலியா அணி இந்தியா அணியை வெல்வது கட்டாயமாகும். தோல்விகளின்றி வெற்றி நடைபோட்ட அவுஸ்திரேலியா அணிக்கு ஆப்கானிஸ்தான் அணி முடிவு கட்டியுள்ளது. கடந்த 50 ஓவர்கள் உலகக்கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அவுஸ்திரேலியா அணியுடன் வெல்ல வேண்டிய போட்டியை தோற்றதனாலே அவுஸ்திரேலியா சம்பியானதும், ஆப்கானிஸ்தான் அரை இறுதி வாய்ப்பையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் அணி 20-20 உலகக்கிண்ணத்தில் பழி தீர்த்துள்ளது.

அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது. இதில் ரஹமனுள்ளா குர்பாஸ் 60 ஓட்டங்களையும், இப்ராஹிம் ஷர்டான் 51 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்களது ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 118 ஓட்டங்கள். இறுதி 5 ஒவகர்ளுக்குள் ஆபாகானிஸ்தான் அணி 30 ஓட்டங்களை மட்டுமே பெற்ற 6 விக்கெட்ளை இழந்தது. பந்துவீச்சில் பட் கம்மின்ஸ் 3 விக்கெட்களையும், அடம் ஷம்பா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 127 ஓட்டங்களை பெற்றது. இதில் க்ளன் மக்ஸ்வெல் 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் குலாப்தீன் நபி இறுதிக்கட்ட 4 விக்கட்களையும், நவீன் உல் ஹக் ஆரம்ப கட்ட விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version