சட்டவிரோத ரயில் பயணங்களுக்கான அபாரதங்களினுடாக 3 மில்லியன் வருமானம் 

ரயில்வே சட்டத்தை மீறியமை தொடர்பான வழக்குகள் மற்றும் அபராதங்களினூடாக இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 3 மில்லியன் ரூபா வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

பயணச் சீட்டின்றி ரயிலில் பயணித்தவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தினூடாகவே அதிகமான வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பயணச் சீட்டின்றி பயணித்த 658 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலையில், அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களினூடாக 2,025,826 ரூபா வருமானம் ஈட்டபட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறைந்த வகுப்புகளுக்கான பயணச் சீட்டை பெற்று, முன்னிலை வகுப்புகளில் பயணித்த 299 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதனுடாக பெறப்பட்ட அபாரதங்களினுடாக 933,702 ரூபா வருமானம் ஈட்டபட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version