பொது போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

பொது போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்கவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பயணிகள் அல்லது பொருட்களுக்கான பொது போக்குவரத்து சேவைகள், பாதைகள், பாலங்கள், மதகுகள் மற்றும் ரயில் பாதைகள் உள்ளிட்ட வீதிகள், ரயில் போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் போன்றன அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version