சமையல் எரிவாயு விலை குறைப்பு..! 

இன்று(02.07) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு 100 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 3,690 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

5 கிலோ கிராம் எரிவாயு விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,482 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

2.3 கிலோ கிராம்  எரிவாயு விலை 18 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 694 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version