ஐரோப்பா கிண்ணம் இறுதிப் போட்டி அணிகள்

ஐரோப்பா கிண்ண காற்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டிக்குத் தோல்விகளின்றி விளையாடிய சகல போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஸ்பெய்ன் அணி தகுதி பெற்றுள்ளது. கடந்த முறை இறுதிப் போட்டிக்குத தகுதி பெற்ற இங்கிலாந்து அணி இம்முறையும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

முதலாவது அரை இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன் அணி பிரான்ஸ் அணி அணியை 2-1 என வெற்றி பெற்றது. பிரான்ஸ் அணி சார்பாக கோனா முனானி அடித்த கோல் மூலம் பிரான்ஸ் அணி முன்னிலை பெற்றது. 21 ஆவது நிமிடத்தில் யமால் அடித்த கோல் மூலம் ஸ்பெய்ன் அணி போட்டியை சமன் செய்தது. 4 நிமிட இடைவேளையில் ஒல்மோ ஸ்பெய்ன் அணிக்கான இரண்டாவது கோலை அடித்தார்.

நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான அரை இறுதிப் போட்டி மிகவும் விறு விறுப்பாக இடம்பெற்றது. நெதர்லாந்து அணி சார்பாக சிமொன்ஸ் முதல் கோலை ஏழாவது நிமிடத்தில் அடித்தார். 21 ஆவது நிமிடத்தில் கிடைத்த பனால்டியை ஹரிக்கேன் கோலாக மாற்ற போட்டி சமநிலை அடைந்தது. இறுதிவரை கடும் விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியில் 91 ஆவது நிமிடத்தில் வட்கின்ஸ் இங்கிலாந்து அணிக்கான வெற்றி கோலை அடித்தார்.

ஸ்பெய்ன் அணி 1964,2008,2012 ஆம் ஆண்டுகளில் கிண்ணத்தை வெற்றி பெற்றுள்ளது. 1984 ஆம் ஆண்டு இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது. இது ஐந்தாவது இறுதிப் போட்டி. இம்முறை வெற்றி பெற்றால் அதிக கிண்ணத்தை வென்ற அணியாக ஸ்பெய்ன் அணி மாறும். தற்போது ஜேர்மனி, ஸ்பெய்ன் அணிகள் தலா மூன்று தடவைகள் வெற்றி பெற்றுள்ளன. இங்கிலாந்து அணியின் இரண்டாவது இறுதிப் போட்டி இது. இதுவரை கிண்ணத்தை வென்றதில்லை. இங்கிலாந்து அணி முதல் சுற்றில் இரண்டு சமநிலை முடிவுகளை பெற்றது. தோல்விகளை சந்தித்ததில்லை.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version