நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
லபுக்கலை – டொப்பாஸ் பகுதியில் இன்று (11.07) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா சென்ற பஸ்ஸொன் ஒன்றே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பஸ்ஸில் 42 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.