உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல்களுக்காக பாதிக்கப்பட்டோருக்கான மீதமுள்ள இழப்பீட்டுத் தொகையை அடுத்த மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பணத்தை செலுத்தாவிட்டால், அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளை முன்வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் 07 பேர் கொண்ட உயர் நீதிமன்ற குழு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது