ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 02ஆவது மனுவும் தள்ளுபடி

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரி சட்டத்தரணி அருண லக்சிறி கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் பிரதம நீதியரசர் தலைமையிலான மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று(15.07) இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது நிராகரிப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேலும் வழக்கு செலவு கட்டணமாக ஐந்து லட்சம் ரூபாவை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் இன்னும் முறையாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு சட்டத்தரணி தனது மனுவில் கோரியிருந்தார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறும் அவர் கோரியிருந்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version